Wednesday, March 28, 2012

ஆரஞ்சு தோலில் வத்தக்குழம்பு

ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிட்டு விட்டு நாம் தோலயை குப்பைத் தொட்டியில் எறிந்து விடுகிறோம். ஆனால் ஆரஞ்சு தோலில் வத்தக்குழம்பு வைத்துச் சாப்பிட்டால்... என்ன?
நாக்கு சப்புக்கொட்டும் சப்தம் இப்போதே கேட்கிறதே! அருமையான மணத்துடன் கூடிய ஆரஞ்சுப் பழத்தோல் வத்தக்குழம்பு செய்முறை இதோ:

ஆரஞ்சு பழத் தோலை நன்றாகக் காயவைத்து, பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின் நீரை வடிகட்டி தோலை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சிறிதளவு கடலைப் பருப்பு, கொத்துமல்லி விதை, மிளகாய் வற்றல், எள் முதலியவற்றை லேசாக வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.

வெந்த ஆரஞ்சு பழத் தோலுடன் புளிக் கரைசலை ஊற்றி, மிக்ஸியில் அரைத்த பொடியையும் போட்டு புளி வாசனை போகும் வரை கொதிக்க வைத்து, கடுகு தாளித்து இறக்கினால் ஆரஞ்சு பழத்தோல் வத்தக் குழம்பு ரெடி.

No comments:

Post a Comment